அஞ்சு பைசாவுக்கு பிரியாணியா…!

அஞ்சு பைசாவுக்கு பிரியாணியா…!

உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி கடந்த 16ஆம் தேதி உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வெறும் ரூபாய் 5 பைசா உட்கொண்டு வந்தால் அரை பிளேட் சிக்கன் பிரியாணி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டார் முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே பார்சலில் இந்த பிரியாணி பொட்டலம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதுபோல் மதியம் 12 மணிக்கு சரியாக பிரியாணி பார்சல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 10 மணி முதல் இருந்தே கடை முன்பு ஆண் மற்றும் பெண்கள் கூட்டம் கூடி கூட்டம் களைகட்ட ஆரம்பித்தது.
அறிவித்திருந்த படி வெறும் ஐந்து பைசா நாணயத்தை கொண்டுவரும் முதல் 100 நபர்களுக்கு பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.

இதைப் பற்றி அந்த பிரியாணி கடை உரிமையாளர் mr.முஜிபுர்ரஹ்மான் அவரிடம் கேட்டபோது தனி ஒரு மனிதன் ஒவ்வொரு மனிதர்களும் உணவு இல்லாத நிலையை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் எந்த ஒரு விஷயத்தை செய்தேன் என்று குறிப்பிட்டால் அது மட்டுமின்றி உணவின் தேவையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் அதே சமயத்தில் பழமைவாய்ந்த நாணயங்களின் சரி பொருட்களையும் சரி தெரிந்துவைத்திருக்க வேண்டும் அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த இந்த ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தேன் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தற்பொழுது கீழடியில் நடந்து வந்து கொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சி மூலம் நமது தமிழர்களின் பழங்கால தொன்மை தெரியவந்துள்ளது இது உலகம் முழுவதும் நிச்சயம் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது அது போலதான் செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்து அதனுடைய மதிப்பு மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்ற நோக்கத்தில் வெறும் ஐந்து ஐந்து பைசாவிற்கு பிரியாணி வழங்கினோம் என்று தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *