இராமநாதபுரம் தொண்டி அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாப பலி..!

இராமநாதபுரம் தொண்டி அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாப பலி..!

அக்டோபர் 16:

நேற்று காலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாட்டுச்சந்தையை சேர்ந்த சேகர் (42 வயது) என்பவரின் மனைவி மலர் (38 வயது) அதே ஊரைச்சேர்ந்த சில பெண்களுடன் தொண்டி மங்கலக்குடி அருகே உள்ள ஊரணிக்கோட்டை என்ற கிராமத்தில் வயலில் களை எடுப்பதற்காகச் சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில் லேசான மழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. அதில் மலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்த பழங்குழம் விஏஓ கனகராஜ் உடனே திருவாடானை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மலரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பர்களே…! மழைக்காலத்தில் இது போன்ற ஆபத்துகளிலிருந்து நம்மையும் நம்மைச்சுற்றி இருப்பவர்களையும் விழிப்போடு இருக்கச்செய்வோம்…உயிரிழப்புகளைத்தடுப்போம்…..!

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *