உள்ளத்தால் உயர்ந்த உத்தமரின் உன்னத வரிகள்…!

உள்ளத்தால் உயர்ந்த உத்தமரின் உன்னத வரிகள்…!

 • வாழ்க்கை என்பது…,
  ஒரு சந்தர்ப்பம் அதை நழுவ விடாதீர்கள்…!
  ஒரு கடமை அதை நிறைவேற்றுங்கள்…!
  ஒரு இலட்சியம் அதை சாதித்துக்காட்டுங்கள்…!
  ஒரு சோகம் அதை தாங்கிக் கொள்ளுங்கள்…!
  ஒரு போராட்டம் அதை சென்று காட்டுங்கள்…!

         ஒரு பயணம் அதை நடத்தி முடியுங்கள்…!

 

 • நம்பிக்கை நிறைந்த ஒருவர் எப்பொழுதும்,

         யார் முன்னேயும் மண்டியிடுவது இல்லை…!

 

 • இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்குமே வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது நம் கைகளில் தான் உள்ள்து…!

 

 • நீங்கள் சூரியனைப்போல் பிரகாசிக்க வேண்டுமென்றால் முதலில் சூரியனைப்போல் எரிய வேண்டும்….!

 

 • வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களின் கதைகளைப் படித்தால் ,உங்களுக்கு வெறும் தகவல் மட்டுமே கிடைக்கும் .ஆனால் ,தோல்வியடைந்தவர்களின் கதையைப்படித்தால் புதிய சிந்தனை உருவாகும்….!

 • ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல, உங்களைப்போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே…!

 

 • வாழ்க்கையில் இரண்டு தருணங்களில் அமைதியாக இருங்கள்…
  1. ஒருவர் உங்கள்வார்த்தைகளால் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லையெனும் போது,

  2. ஒருவர் எந்தவித வார்த்தைகளும் இல்லாமல் உங்களைப் புரிந்து கொள்ளும் போது…

 

 • தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு என்ற மருந்துகளே தோல்வி எனும் நோய்க்கான சிறந்த மருந்து. அது உங்களை வெற்றியாளராக மாற்றும்…!

 

 • உங்களின் முதல் வெற்றிக்குப்பின்னால் ஒருபோதும் ஓய்வெடுத்துவிடாதீர்கள்..
  ஏனெனில், இரண்டாம் முறை நீங்கள் தோற்றால் உங்களின் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்று கூறுவதற்கு பல உதடுகள் காத்திருக்கலாம்…!

 

 • நமது பிற்ப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் …..என்று வெறும் வார்த்தைகளால் மட்டும் கூறாமல் அதை செய்து காட்டிய சாதனை நாயகனுக்கு நமது மாவட்ட மக்கள் சார்காக இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!
  நம் மாவட்டத்தை உலகறியச்செய்த உன்னதமான உத்தமர்…!

 

 • அன்னாரின் பொன்மொழிகளை நாமும் நம்முடைய வாழ்வில் பின்பற்றி இந்த உலகத்திற்கு ஒரு முன்னாதரணமாக வாழ்ந்து காட்டுவோம்…!
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *